web log free
March 16, 2026

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

மாரவில பகுதியில் நேற்று (05) இரவு 9 மணி அளவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் மீது, குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும், இதனையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd