உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பணத்தை அரசாங்கம் பெற்றுக் கொள்ளாவிட்டால் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் தமது தரப்புடனான கலந்துரையாடலில் பின்வருமாறு தெரிவித்ததாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார்.
தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் தமது கட்சி விசேட கலந்துரையாடலை நடத்தியதாகவும் அதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான பிரேரணைகள் முன்வைக்கப்படவில்லை எனவும், எனவே இந்த வாக்கெடுப்பை அரசாங்கம் ஒத்திவைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் வட்டகல மேலும் தெரிவித்தார்.