web log free
May 11, 2025

களுத்துறையில் கட்டுப்பணம் செலுத்தி தேர்தல் களத்தில் குதித்தது மொட்டுக் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்புச் செய்யும் நடவடிக்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இன்று (05) களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

களுத்துறை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி சபைகள் மற்றும் 4 மாநகர சபைகள் என 17 உள்ளூராட்சி மன்றங்களின் சார்பில் கட்டுப்பணம் வைப்பிலிடப்பட்டது.

கட்டுப்பணத்தை வைப்பிலிட வந்த களுத்துறை மாவட்ட தலைவர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு களுத்துறை வரலாற்று போதிசபைக்கு வந்து ஆசிர்வாதம் பெற்று களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு வந்து கட்டுப் பணத்தை வைப்பிலிட்டனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த கடகொட, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜயரத்ன மற்றும் முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd