web log free
July 01, 2026

சௌமியபவானில் ஒன்றுகூடி தேர்தல் வெற்றி குறித்து புது வியூகம் வகுத்துள்ள காங்கிரஸ்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமிய பவனில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணத்திலும்,மாவட்டத்திலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடவுள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளதாக மாவட்டப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மேலும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பாக பல கோணங்களில் ஆராயப்பட்டது. இறுதித் தீர்மானம் இம்மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் குழு, வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு, பிரசாரக் குழு என மூன்று குழுக்கள் இதன் போது நியமிக்கப்பட்டுள்ளன.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd