web log free
March 16, 2026

இன்றும் நாளையும் நாடாளுமன்றக் கூட்டம்

நாட்டின் பாதுகாப்பு நிலை தொடர்பில் ஆராய்வதற்காக இன்றும் நாளையும் விசேட நடாளுமன்ற விவாதம் நடைபெறுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்றத்தின் ஊடாக முக்கியமான மற்றும் பொருத்தமானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சபாநாயகர், கட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

விவாதத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதைத் தவிர்த்து பொறுப்புடன் விவாதத்தில் கலந்து கொள்ளுமாறும் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்குமாறு சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd