மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் வாய்ந்தவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அந்த கலந்துரையாடலில், மொட்டுக் கட்சியின் பலமான அந்த நபரிடம் தற்போதைய நெருக்கடிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கனவே பல குழுக்களாக பிரிந்துள்ளது. இதன்படி, மொட்டுவின் பங்காளிக் கட்சித் தலைவர்களாக இருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பிரிந்து, மொட்டுவின் பலமான குழுவாக இருந்த ராஜபக்சவின் பலமாக இருந்த டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் போன்ற ஒரு குழு தனியான குழுவாகவும், அநுர யாப்பா, சந்திம வீரக்கொடி, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன போன்ற குழுவும் தனியான குழுவாக செயற்படுகின்றனர்.
இதேவேளை, மொட்டு, பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, நிமல் லான்சா அணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அணி என மேலும் பிளவுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.