web log free
March 07, 2026

இலங்கைக்கு வௌிநாட்டு நாணயங்கள் கடத்த முயன்ற இரு பெண்கள் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.38.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ கரன்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பெண்களை கைது செய்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. 

அதில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த 2 பெண்களிடம் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்களுடைய உள்ளாடைக்குள் 17,300 அமெரிக்க டாலர் மற்றும் 28,150 யூரோ கரன்சி இருந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.38.5 லட்சம். அதை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd