அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் முயற்சியில் அரச ஊழியர்களின் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் மேலதிக நேர மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் முற்றாக குறைக்கப்படாது எனினும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்டதாகவே அமையும் என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்தார்.
அதன்படி, இந்த கொடுப்பனவுகள் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக நேர விடுப்பு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் தவிர்த்து சம்பளத்திற்காக மாதாந்தம் 9300 கோடி ரூபாய் செலவாவதாக அவர் கூறினார்.