web log free
April 26, 2025

கனடாவில் இருந்து வந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென உயிரிழப்பு

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து இன்று (10) அதிகாலை உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

புத்திக கருணாரத்ன என்ற 54 வயதுடைய இந்த பயணி இலங்கையின் பட்டகன பிரதேசத்தில் வசித்து வந்தவர்.

அவர் இன்று (10) அதிகாலை 02.18 மணியளவில் தனது தாயாருடன் கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 மூலம் கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு தனது தாயாரை அழைத்து வரும் வேளையில் இன்று (10) அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் முகப்பு மண்டபத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். 

பயணியின் சடலம் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா, பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 94507 குமார ஆகியோரின் பணிப்புரைக்கமைய கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜானக சேனாதீர அவர்களின் மேற்பார்வையில் இந்த மரணத்தின் பிரேதப் பரிசோதனை இன்று (10) நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd