web log free
July 01, 2025

பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி

பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று பெற்றோரிடம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 “பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னரே அவற்றை இரண்டாம் தவணைக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் வருகை நேற்றைய முதலாம் நாள் குறைவாக இருந்துள்ளது.

 பெற்றோர் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் விடுவது குறித்து தம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் உரிய காலத்துக்கு பாடசாலையை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd