web log free
April 26, 2025

பாராளுமன்ற உறுப்பினரின் வாடகை காணியில் கஞ்சா பண்ணையை பொலிசார் சோதனை

ஹம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்தில் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிற்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா பண்ணை ஒன்றை பராமரித்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமம் முகாமில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதி சபாநாயகருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியில் 2 ½ ஏக்கர் நிலத்தை சந்தேக நபர் குத்தகைக்கு எடுத்து சட்டவிரோதமாக கஞ்சா பண்ணை ஒன்றை பராமரித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 4 ½ அடி உயரமுள்ள 18,956 கஞ்சா செடிகளை STF அதிகாரிகள் கைப்பற்றினர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Last modified on Wednesday, 11 January 2023 06:47
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd