web log free
May 15, 2026

புல்மோட்டையில் இருவர் வெட்டிக் கொலை

புல்மோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலம்குளம் பகுதியில் நெற்காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் காயமடைந்த மேலும் மூவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பிரிவு இலக்கம் 01 ஐச் சேர்ந்த அப்துல் பரிட் அலாவுதீன் மற்றும் சின்ன மரிக்கார் படூர் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இறந்த இருவரும் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரில் இருவர்.

இந்த நெற்காணியின் உரிமை தொடர்பில் அப்துல் பரீட் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கும், சின்னமரிக்கரையின் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கும் இடையில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd