மக்கள் விடுதலை முன்னணிக்கு அரசாங்க அதிகாரம் கிடைத்தால், வடகொரியாவைப் போன்று எதிரிகள் கொல்லப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பௌத்த விவகாரங்களுக்குப் பொறுப்பான தலைவர் தனவர்தன குருகே தெரிவித்துள்ளார்.
மூன்று முறை அரசியலில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட ஜே.வி.பி., திசைகாட்டி போர்வையில் அதிகாரம் கேட்கிறது என்றும், இம்முறை மணியை விட்டுவிட்டு, திசை என்ற போர்வையில் அதிகாரம் கேட்பதாகவும் தவறி வழங்கினால் எதிர்காலத்தில் வருந்த நேரிடும் என்றும் அவர் கூறினார்.
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியைப் பெற்றால், அது இந்த நாட்டில் ஜனநாயகத்தின் மரணமாக இருக்கும் என்று கூறிய அவர், ஆட்சிக்கு வந்த பிறகு, வடகொரியாவைப் போல் எதிரிகள் கொல்லப்படுவார்கள் என்றும் கூறினார்.
மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் சின்னம் திசைகாட்டியாக இல்லாமல் துப்பாக்கியாக இருந்திருக்க வேண்டும் என்றார்.