web log free
May 03, 2026

லொஹான் ரத்வத்த தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிட சிறைச்சாலைகள் அமைச்சுக்கு ஆர்.டி.ஐ கமிஷன் உத்தரவு !

2021 செப்டம்பரில் அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு முன்னாள் இராஜாங்க சிறைச்சாலை அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட சர்ச்சைக்குரிய விஜயம் தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு சிறைச்சாலைகள் அமைச்சுக்கு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்கு இரவு வேளையில் நண்பர்கள் குழுவுடன் புகுந்து அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி சமூகம் மற்றும் சமய மத்திய நிலையம் (CSR) செய்த மேன்முறையீட்டை பரிசீலித்து ஆணைக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd