ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொலிஸ் மா அதிபர் ஒருவரும் எவ்வித அடிப்படையும் இன்றி தம்மை கைது செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிடுகின்றார்.இன்று புலனாய்வு அமைப்புகள் தனக்குப் பின்னால் இருப்பதாகவும், இது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கூட தலையிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
ஹிருணிகா பிரேமச்சந்திர, சமகி ஜன பலவேயவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தனக்கு வெறுப்பு இருப்பதாகவும், அவர்கள் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
தனது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் உரையாற்றும் விதத்தில் பிரச்சினை இருப்பதை தானும் ஒப்புக் கொள்வதாகவும் அதனை சஜித் பிரேமதாசவிடம் நான் அதை சொல்லியிருக்கிறேன் .என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்