ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வலம்புரி சங்கு ஒன்றினை நுவரெலியா அதிரடிப் படையிரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு (10) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் ஸ்ரதன் பகுதியில் சுருவத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு குறித்த வீட்டினை சோதனை செய்த போது மிகவும் சூட்சுமமான முறையில் அரிசி பாத்திரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வலம்புரி சங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த வலம்புரி சங்கினை ஆறு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வலம்புரி சங்கு மற்றும் சந்தேக நபர்கள் இன்று (11) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.