உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகளின் உறவினர்களுக்கு இலங்கை இழப்பீடு வழங்கவுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் தலைவருமான கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இலங்கையில் சில இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் குண்டு தாக்குதல் சம்பவங்களில் 253 பேர் உயிரிழந்தனர்.
இவர்களுள் 44 பேர் வெளிநாட்டவர்கள் என்று அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களின் எண்ணிக்கை 11என்பது குறிப்பிடத்தக்கது.