மக்கள் கோரும் தேர்தலை நடத்தாவிட்டால், வீதியில் இறங்கி அமைதியான ஜனநாயகப் போராட்டத்தை நடத்தி, தேர்தலில் எப்படியாவது நடத்தி வெற்றி பெறுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.
நாட்டை அழித்த ராஜபக்சக்களை போராட்டம் மூலம் விரட்டியடித்தாலும், பதவியேற்ற ராஜபக்ச நிழல் அரசாங்கமும், ராஜபக்சவின் கைப்பாவையாக இருந்த ஜனாதிபதியும் சுகபோக வாழ்க்கை வாழ வழிவகுத்ததாகவும், அவர்களுக்கு பிரச்சினை இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அமைதியான போராட்டத்தை தாம் நன்றாக ஏற்றுக்கொள்கின்றேன் எனவும், ஆனால் போராட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தீ வைத்து, மக்களை கொன்று, அரச சொத்துக்களை நாசம் செய்த சில அரசியல் கட்சிகள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறுவது நகைப்புக்குரியது எனவும் எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் மக்கள் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இந்த நாட்டு மக்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைக்க வழி செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
கம்புருபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.