web log free
May 05, 2024

மைத்திரி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பும் பிற்போடப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிராகரித்து அந்த வழக்குகளில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மைத்திரிபால சிறிசேன குறித்த மனு தாக்கல் செய்திருந்தார்.

தீர்ப்பு இன்று (22) அறிவிக்கப்படவிருந்த போதிலும், மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் உத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். 

போதிய புலனாய்வுத் தகவல் கிடைத்தும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.