தேர்தல் தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் முன்னரே தேர்தல் நடத்தப்படாது என அறிவித்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தமைக்காக ஜனாதிபதி எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக இன்று முதல் மக்கள் படையொன்று அழைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேளையில், தீர்மானத்தை வழங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்தமை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும் அவர் கூறுகின்றார்.
வாக்கு இல்லை என்பதற்கு பயந்துதான் ஜனாதிபதி இவ்வாறு கூறுகின்றார் என்றும் பணப்பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.