web log free
September 08, 2024

மஹிந்தவை பிரதமராக்க எடுக்கும் முயற்சி அம்பலம்

தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மீண்டும் மஹிந்த ரபஜாக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மிடம் பிரேரணையை கொண்டு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“பிரதமர் பதவியை மாற்றும் திட்டம் இருப்பதாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி நண்பர்கள் எம்மிடம் முன்மொழிந்துள்ளனர். தினேஷ் குணவர்தனவை நீக்கி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கும் திட்டம் உள்ளது. தலையணையை மாற்றினால் தலைவலி தீரும் என்று நாம் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டிற்கு செல்ல வேண்டும். மற்றபடி பிரதமர்களை மாற்றினால் இந்த நாட்டின் பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அது மாத்திரமன்றி, பிரதமர் பதவியை மாற்றி தாம் விரும்பியவரை பிரதமராக்கும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு சுதந்திர மக்கள் கூட்டமைப்பில் உள்ள எவரும் ஆதரவளிக்கவில்லை. அதற்காக எங்களின் ஆசீர்வாதங்கள் எதையும் பெறுவதில்லை என்பதை தெளிவாகக் கூற வேண்டும். மகிந்த ராஜபக்ச, அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வெடுப்பதே சிறந்தது என நான் கருதுகிறேன். அப்படி நடந்தால், அவர் தன் நாட்டுக்காக ஏதாவது செய்திருந்தால், அந்த நற்பெயரைக் காக்க அதுவே காரணமாக இருக்கும்." என்றார்.