போயா நாட்களில் சுற்றுலா ஹோட்டல்களில் மாத்திரம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிவை சமர்ப்பித்துள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு போயா தினங்களில் மதுபானம் கிடைக்க வழி இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் போயா தினத்தில் சுற்றுலா ஹோட்டல்களில் மட்டும் மதுபானம் வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.