அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
குறிப்பாக அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என பாராளுமன்ற கூட்டத்திலும் ஐ.தே.க செயற்பாட்டாளர்களுடனும் ஜனாதிபதி தெளிவாக கூறியிருக்கின்றார்.
எவ்வாறாயினும், தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தமாட்டார் என எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணாயிரம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உள்ளுராட்சி மன்றங்களை நடத்துவது கடினம் என ஜனாதிபதி அந்தத் தருணத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் 8,000 பிரதிநிதிகள் குறைக்கப்பட்டால், மாகாண ஆணையாளர்கள் நியமிக்கப்படும் போது தற்போதைய தலைவரை நியமிக்குமாறு ஒரு குழுவினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு பசில் ராஜபக்ச ஆதரவளிக்க மாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.