web log free
May 03, 2024

பொலிஸாரின் கட்டுப்பாட்டில் மிரிஹான

சுமார் 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 3000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்கிய விசேட அதிரடிப்படையினர் மிரிஹான பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மிரிஹான ஜூபிலி போஸ்டில் நடத்தப்பட்ட  போராட்டத்தை கட்டுப்படுத்தவே இவ்வாறு அழைக்கப்பட்டனர். 

இதையடுத்து அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களை பொலீசார் அப்புறப்படுத்தினர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கான போராட்டம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி ஆரம்பமானது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு கோரி ஜூபிலி கனுவ பிரதேசத்தில் போராட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டது.