web log free
December 09, 2025

சட்டம் ஒழுங்கு குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

தான் பதவியில் இருக்கும் வரை எவருக்கும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை முகாமில் முப்படை மற்றும் பொலிஸாரிடையே கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதியே அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, தொடர்ச்சியாக கடனைப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத்தினை விட போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் இதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வருவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொலிஸார் மாத்திரமல்லாது, முப்படைகளின் உதவியுடன் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் யாருக்கும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இடமளிக்க போவதில்லை என கூறிய அவர், அனுமதியுடன் அமைதிவழி கூட்டங்களை நடத்த முடியும் எனவும் தெரிவித்தார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd