இலங்கை விமான சேவை, இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை மறுசீரமைக்க முன்மொழியப்பட்டுள்ள பிரதான பொது நிறுவனங்களின் கணக்குகளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவை இறைமை உத்தரவாதமான வெளிநாட்டுக் கடனாக அரசாங்கத்திற்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தற்போது வெளியாகியுள்ள கடந்த வருடத்தின் முதல் காலாண்டு தொடர்பான நிதி அறிக்கைகளின்படி, 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 52 அரச நிறுவனங்களில் 19 நிறுவனங்களின் நட்டம் 859 பில்லியன் ரூபா அல்லது எண்பத்து ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து கோடி ரூபாவாகும். (85,900 கோடி)
இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அந்த நேரத்தில் அரச நிறுவனமொன்றின் அதிகூடிய நட்டத்தை பதிவு செய்தது. அந்த நிறுவனம் பெற்ற இழப்பு 628 பில்லியன் ரூபாய் அல்லது அறுபத்தி இரண்டாயிரத்து எண்ணூறு கோடி. (62,800 கோடிகள்.) அந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஹில்டன் ஹோட்டல் கொழும்பு சுமார் 5 பில்லியன் ரூபாவை (5200 கோடிகள்) இழந்துள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.