நாளை ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முதற்கட்ட கட்சி மாறுதலில் ஈடுபட்டுள்ள எம்.பி.க்கள் குழுவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி ஒருவரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிரேஷ்ட எம்.பி.களும், பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி ஒருவரும், எதிர்க்கட்சியின் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பேரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்க்கட்சிகளின் சுயேச்சைக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கட்சி மாறுவதற்கு தயாராகி வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவர்களில் சிலர் நாளை (04) அல்லது நாளை மறுதினம் கட்சி மாறலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் கட்சி மாறவுள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களில் பொஹொட்டுவவைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த எம்.பி.க்கள் அனைவரையும் இணைத்து புதிய அரசியல் கூட்டணியை தொடங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.