web log free
May 07, 2026

லிட்ரோவிற்கு போட்டியாக லாப் கேஸ் விலையும் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு (Laugfs Gas) சிலிண்டரின் விலையும் குறைக்கப்படவுள்ளது.

12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் 1290 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3990 ரூபாவாக அமைந்துள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1596 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவாலும் 2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டரின் விலை 183 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd