web log free
November 27, 2024

விபச்சாரத்திற்கு வர மறுத்த 22 வயது யுவதி மீது தாக்குதல்

விபச்சாரத்தில் ஈடுபட வராத காரணத்தினால் ஒரு யுவதியை வீட்டில் சென்று தாக்கி கையடக்கத் தொலைபேசியைக் கொள்ளையடித்த விபச்சார விடுதியின் உரிமையாளரும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக வந்துரம்ப பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொட, ரன்டோம்பே மற்றும் உரகஹா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை ரன்டோம்பே பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த விபச்சார விடுதி பராமரிக்கப்பட்டு வருகிறது. விபச்சார விடுதியை நடத்தி வந்தவர் 52 வயதுடைய பெண்.

தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய யுவதி இந்த விபச்சார விடுதியில் சுமார் ஒரு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளார். குறித்த பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் உள்ளதால் அவரை பார்க்க சென்ற போது விபச்சார விடுதியின் உரிமையாளருடன் பழகி நட்பு கொண்டுள்ளார். 

பின்னர் விபச்சார விடுதியின் உரிமையாளர் தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் அமர்த்தியுள்ளார்.

சேவை பெற வரும் ஒருவரிடமிருந்து ரூ. 5000 வசூலிக்கப்பட்டதுடன், விபச்சார விடுதியின் உரிமையாளர் 3500 ரூபாயை வைத்துக் கொண்டு ரூ. 1500 யுவதிக்கு வழங்கி வந்துள்ளார். 

இந்த விபச்சார விடுதியில் சுமார் ஒரு மாத காலம் வேலை செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார் அந்த யுவதி. இந்த விபச்சார விடுதிக்கு அவள் மீள திரும்பாததால், விபச்சார விடுதியின் உரிமையாளரும் மற்றொரு பெண்ணும் இந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அவள் விபச்சாரத்திற்கு திரும்ப மறுத்துவிட்டதால் ஆத்திரம் அடைந்த விபச்சார விடுதியின் உரிமையாளரும் மற்றைய பெண்ணும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி கையடக்கத் தொலைபேசியை பறித்து சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd