web log free
February 07, 2026

கடவுச்சீட்டு மோசடியில் கைது செய்யப்படுவாரா டயானா கமகே?

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுவாரா இல்லையா என்பது குறித்த தீர்மானம் ஏப்ரல் 24 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் கமகேவை கைது செய்யுமாறு கோரிய மனு நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்ததை அடுத்து, இராஜாங்க அமைச்சர் தனது குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் காரணமாக தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க அமைச்சருக்கான இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

இராஜாங்க அமைச்சருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது என ஹேரத் குற்றஞ்சாட்டினார், ஏனெனில் அவருக்கும் பிரித்தானிய குடியுரிமை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd