web log free
April 30, 2024

புது வருடத்தில் வழுக்கு மரம் ஏறுதல் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும் போது 'வழுக்கு மரம்' தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதனால் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பு முழுமையாக ஏற்பாட்டுக் குழுவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். 

வழுக்கும் மரங்களை நிறுவும் போது முறையான நியமங்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வழுக்கும் மரம் விழுந்து விபத்து அல்லது உயிர் சேதம் ஏற்பட்டால் அது தவறு எனவும் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை பொலிஸ் நிலையங்களுடன் சரியான ஒருங்கிணைப்புடன் நடத்த வேண்டும் எனவும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுமாயின் அதற்கு முன்னதாக பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.