புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதங்களை பூர்த்தி செய்வதாக காணப்படவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
காலவாதியாகிப்போன சட்டமான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த புதிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைத்து அதனை நீக்கப்போவதாக ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்தும் போது அனைத்து பங்குதாரர்களுடனும் நேர்மையான வலுவான கலந்தாலோசனைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஏனெனில் இது அவ்வாறான சட்டம் எனவும் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் ஆகவே அரசாங்கம் பல்வேறு தரப்பட்ட பங்குதாரர்களின் கருத்துக்களை செவிமடுப்பதற்கு நேரத்தை செலவிடும் என நாங்கள் கருதுகின்றோம், எனவும் தெரிவித்துள்ள அவர் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தராதரங்களை பூர்த்தி செய்வதாகவும் இலங்கை மக்களின் தேவைகளை உண்மையில் பூர்த்தி செய்வதாகவும் காணப்படவேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.