web log free
November 27, 2024

போலிச் செய்திகள், அநாவசிய வதந்திகள் குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் அமைச்சுப் பதவிகளைப் பகிர்தல் போன்ற மானியச் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணையத் தயாராகி வருகிறோம் என்ற புதிய செய்தியை அரசாங்க சார்பு குழுக்கள் உருவாக்கி சமூகமயமாக்கியுள்ளன.

இந்தப் போலிச் செய்தியை முற்றாக நிராகரிப்பதுடன், போலிச் செய்தியைப் போலவே அதனை இழிவாகக் கண்டிக்கிறோம்.

படுமோசமான ராஜபக்ச அரசாங்கத்தின் நீட்சியாக இருக்கும் தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமான பாதாளத்திற்கு எமது நாட்டைத் தள்ளுவதாக ஆரம்பம் முதலே எச்சரிக்கின்றோம், விரைவில் இந்த அரசாங்கத்தின் தோல்வியடைந்த வேலைத்திட்டம் அப்பட்டமாக வெளிப்படும்.

? பொஹொட்டுவவின் நிழல் அரசாங்கமாக மாறிவரும் இந்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தி குறித்து போலியான செய்திகளை பரப்பி தனது தோல்வியான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயன்றது.

முதலாளித்துவ கும்பல்கள் மற்றும் பிற்போக்கு சக்திகளின் ஒரே சவால் எமது ஐக்கிய மக்கள் சக்தியாகும், அந்த கும்பல் ஒன்றுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியை சேதப்படுத்துவதற்கு எந்த விலையையும் கொடுக்க இருமுறை யோசிப்பதில்லை.

? ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்தில் இணையப்போவதாக ஆரம்பத்தில் போலியான செய்திகளை வெளியிட்ட கும்பல், பிரதமர் பதவிக்காக சமகி ஜன பலவேக அரசாங்கத்துடன் இணையும் என்பதை தங்களின் சமீபத்திய உத்தியாகப் பயன்படுத்துகின்றனர்.

இது ஒரு அப்பட்டமான பொய் என்பதுடன் ஆதாரமற்ற பொய்யான செய்திமாகும்.

? அந்த கும்பலுக்கும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தீர்க்கமான பிளவு கோடு என்னவென்றால், நாங்கள் மக்கள் சக்தி மற்றும் வெளிப்படைதன்மையை நம்பும் அதே வேளையில் அவர்கள் டீல் மற்றும் மறைமுக தன்மையை என்பதை நம்புகிறார்கள்.

இந்தத் துரதிர்ஷ்டவசமான விதியிலிருந்து நமது நாட்டை ஒரு தேர்தலால் காப்பாற்ற முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்நாட்டில் இயங்கும் நாகரீக ஊடகங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்காக தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டு ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்வதை வெளிப்படுத்திய ஒரு சில கைக்கூலி ஊடகங்களுக்கு இது வலியுறுத்தப்பட வேண்டும்.

? அவர்களுக்குக் கொடுக்கப்படும் விலைக்காக எந்தவொரு கட்டுக்கதையையும் சமூகமயமாக்குவதற்குப் பதிலாக, அவர்கள் ஊடகங்களை புத்திசாலித்தனமாகவும் நெறிமுறையாகவும் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.

இருப்பினும், அவர்களின் எஜமானரின் கருத்தை பிரபலப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம்.

மக்களால் உண்மையை மாற்ற முடியாது, ஆனால் உண்மையால் மக்களை மாற்ற முடியும் என்பதை வலியுறுத்துவோம்.

? கடந்த ஒவ்வொரு நொடியும் நம் நாட்டின் அப்பாவி மற்றும் ஆதரவற்ற மக்களின் வாழ்க்கையின் தலைவிதிக்கு தீர்க்கமானது என்பதை நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம், மேலும் அந்த மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியடையச் செய்வதற்கு நேரத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக, வெறுப்பும். பேரம் பேசுவதும்,சதிகள் மற்றும் உல்லாசப் பேரரசர்களின் அரசியலை மட்டும் முன்னெடுப்பது தன்னிச்சையானது, இதற்கு எங்கள் கடுமையான அதிருப்தினை நாங்கள் வெளியிடுவ துடன் துரதிஷ்டமான அரசாங்கத்திற்கு எமது எதிர்ப்பினை தெரிவிக்கவிரும்புகின்றோம்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd