தற்போதைய அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் இல்லாவிடில் வேறு மாற்று நடவடிக்கைக்கு செல்லும் எனவும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் வழிபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நேரத்தில் அநீதிக்கு எதிராக மக்கள் நேர்மையாக எழுந்து நிற்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் ஆதரவளிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நேரத்தில் மக்கள் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் முன்னோக்கி செல்ல வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.