web log free
February 08, 2026

மொட்டுக் கட்சி எம்பிக்களுக்கு ஏமாற்றம்

உத்தேச அமைச்சரவை மாற்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மொட்டு கட்சியின் பல உறுப்பினர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் அதே வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது.

திகதிகள் மற்றும் பெயர்களுடன் கூடிய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளியாகியிருந்ததோடு, மொட்டுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.

இதேவேளை மொட்டு உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் அக்கட்சியின் தலைவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd