web log free
June 26, 2026

பஸ் கட்டணம் குறையுமா

டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“பொது போக்குவரத்து சேவைகளின் தரத்தை மேம்படுத்த அமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவுகளை பயணிகள் இன்று அனுபவிக்க வேண்டியுள்ளது. பயணிகளுக்கு எரிபொருள் விலையை ஓரிரு ரூபாவால் குறைப்பது நடைமுறைச் சாத்தியமில்லை. பயணிகளுக்கு மின்னணு முறையில் கார்டு மூலம் பணம் செலுத்த திட்டமிட்டால் கண்டிப்பாக இந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க முடியும். அந்த திட்டத்தை அரசு செயல்படுத்தினால் நாளை பேருந்து கட்டணத்தை குறைக்கலாம்" என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd