web log free
April 26, 2024

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று

சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று(03) அனுஷ்டிக்கப்படுகிறது.

இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை(03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை பரிந்துரைத்தது.

''உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்'' என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

180 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ஊடகச்சுட்டியில் கடந்த வருடம் நோர்வே முதல் இடத்தை தன்வசப்படுத்தியது.

சர்வதேச ஊடகச் சுட்டியில் 2022 ஆம் ஆண்டு இலங்கை 146 ஆவது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது, இலங்கையில் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரம் தொடர்பில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளது.

Last modified on Wednesday, 03 May 2023 09:25