web log free
March 25, 2026

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 75 பாகை அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல காலகட்டங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளிலும் மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளிலும் அவ்வப்போது பலத்த காற்று வீசும். (40-45) வரை பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd