web log free
April 25, 2024

இலங்கை குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பு

உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது.

புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்பதை நாசா கணித்துள்ளது. 

உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் அடர்த்தியை கணக்கிட்டு நாசாவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

உலகின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட இடங்களாக இலங்கையின் தெற்கு, மாலைதீவின் கிழக்கே இந்திய பெருங்கடல் மற்றும் ஹட்சன் விரிகுடாவிற்கு அருகில் உள்ள கனடாவின் வட பகுதி என்பவற்றை நாசா அறிவித்துள்ளது.

நாசாவின் கண்டுபிடிப்புகளுக்கு அமைவாக, பூமியின் மேற்பரப்பின் அடர்த்தியும் எரிமலையின் அடர்த்தியும் இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

உலகில் அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களில் பொலிவியா, வடக்கு அண்டீஸ் மலைகள் பெயரிடப்பட்டுள்ளன.

எரிமலைக் குழம்புகளின் செறிவு மற்றும் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து இந்த ஈர்ப்பு விசை மாற்றமடையும் எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.