web log free
April 29, 2025

நாட்டை முன்னேற்றும் பொது வேட்பாளர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கமும் தமது கட்சியும் தயாராக இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் தயாராக இருப்பதாகவும், அதன்படி நாட்டுக்காக உழைத்த நாட்டிற்காக உழைக்கக் கூடிய ஒரு பொது வேட்பாளர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்படுவார் என்றும் அவர் நிச்சயமாக அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd