web log free
April 29, 2025

ரணில்ராஜபஷ அரசாங்கத்தின் இனவாத நாடகம்

தற்போதைய இனவாத நாடகம் ரணில் ராஜபக்சவால் எழுதப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்  டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆட்சியில் ரணில் விக்கிரமசிங்க உயர் பதவியில் இருக்கும் போதெல்லாம் நாட்டின் பாதாள உலகக் கும்பல் தலைதூக்குவதாக டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாதாள உலகக் கும்பலுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான உறவு புதிய விடயமல்ல, கடந்த 12 நாட்களில் 10 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், திட்டமிட்ட குற்றச் செயல்களை அனுமதிக்கும் பல்வேறு கட்டளைகள் நாட்டில் நிறைவேற்றப்படுவதற்கு அதிகாரிகள் காத்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். 

நாட்டில் நிலவும் உண்மையான இனவாதப் பிரச்சினைகளை மறைக்க ஜெரோமும் நடாஷலாவும் செயற்படுவதாகவும், ரணிலின் நாடகத்தின் ஓர் அங்கமாகவே நடாஷாலா, ஜெரோம் ஆகியோர் முன்வருவதாகவும், இந்த திருடர்களை துரத்துவதற்கு டொய்யோ, பய்யோ, கய்யோ என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் டிலான் பெரேரா தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd