web log free
February 08, 2026

11 பேருடன் தாய்லாந்து சென்ற பிரதமர்

தாய்லாந்துக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (31) அதிகாலை புறப்பட்டதாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பிரதமருடன் மேலும் 11  பேரும் தாய்லாந்து சென்றுள்ளனர்.

இவர்கள் இன்று காலை 01.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-402 இல் தாய்லாந்தின் பாங்காக் நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்னும் சில தினங்களில் தாய்லாந்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட "சக் சுரின்" என்ற யானை விசேட சரக்கு விமானம் மூலம் மீண்டும் கொண்டு செல்லப்பட உள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd