web log free
April 01, 2026

மண்சரிவு எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச மக்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd