web log free
May 17, 2026

கிழக்கு ஆளுநர் அழைப்பு - இலங்கை வருகிறார் கமலஹாசன்

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமாகிய கமல்ஹாசனை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த செந்தில் தொண்டமான் இந்த அழைப்பை விடுத்துள்ளார். 

அதன்படி கமல்ஹாசன் விரைவில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd