web log free
May 02, 2024

ஈரானிடம் வாங்கி எண்ணெய்க்கு பதிலாக தேயிலை கொடுத்து கடனை அடைக்க இலங்கை முடிவு!

ஈரானுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய 250 மில்லியன் அமெரிக்க டொலரை அடுத்த மாதம் முதல் பண்டமாற்று முறையில் திருப்பிச் செலுத்த இலங்கை முடிவு செய்துள்ளது. 

அந்தத் தொகைக்கு ஈடாக இலங்கை தேயிலையைக் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை ஈரானிடம் 250 மில்லியன் டொலர் பெறுமானமுள்ள எண்ணெயை 2012இல் கடனாகப் பெற்றது.

பண்டமாற்று உடன்பாடு 2021இல் செய்துகொள்ளப்பட்டது. ஆனால் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் திருப்பிச் செலுத்துவது தள்ளிப்போனது.

தற்போது இலங்கை அதன் முதன்மைச் சந்தையான தேயிலை விற்பனையை அதிகரிப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளது. பண்டமாற்றால் அந்நியச் செலாவணி இருப்பை இலங்கைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இந்த பண்டமாற்றினால் இருதரப்பும் அமெரிக்க டொலரை நம்பியிருக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று இலங்கைத் தேயிலைச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாதத்துக்கு 5 மில்லியன் டொலர் மதிப்புள்ள தேயிலையை 48 மாதங்களுக்கு ஈரானுக்கு அனுப்புவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இதன் ஆரம்பக் கட்டமாக ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டொலர் மதிப்புள்ள தேயிலையை அனுப்பவிருப்பதாக அவர் கூறினார்.