web log free
May 02, 2024

18 அரச நிறுவனங்களில் 1000 பில்லியன் நட்டம்

2022 ஆம் ஆண்டிற்கான நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வருடாந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் (2022) 18 அரச நிறுவனங்கள் 958.7 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் நஷ்டம் அடைவதற்கு முக்கிய காரணம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான சரியான விலை இல்லாமை, செயல்பாட்டு திறமையின்மை, அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள், மோசமான மனித வள மேலாண்மை, மோசமான கட்டுப்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவை ஆகும்.

அத்துடன், கடந்த ஆண்டு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்களால் ஏற்பட்ட பரிவர்த்தனை இழப்பே இந்த கணிசமான இழப்பிற்கு முக்கிய காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், அரசு நிறுவனங்களின் செயல்பாடுகள் பலவீனமடைந்துள்ளன.

இந்த அரச நிறுவனங்களின் நிதிப் பலவீனங்கள் முழுப் பொருளாதாரத்திலும் குறிப்பாக வங்கித் துறையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.