web log free
April 02, 2026

சோதனைக்குச் சென்ற பொலிஸார் மீது மன்னாரில் தாக்குதல்

மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீடொன்றை சோதனையிடச் சென்ற உயிலங்குளம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தந்தை, மகன் உள்ளிட்ட குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உயில்ங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜகத் குமார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சோதனையிட்டனர்.

தந்தை மற்றும் மகன் உட்பட குழுவொன்று வீட்டில் இருந்த பொலிஸாரை பொல்லுகளால் தாக்கியதில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களும் காயமடைந்ததாக மன்னாரில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய இரண்டு தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd