சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோகிராம் கேரள கஞ்சா மன்னார் இலுப்பகடவாய் தடாகத்தில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான SLNS புவனேகா மற்றும் SLNS கஜபா ஆகிய கப்பல்களால் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொத்தம் 92 கிலோகிராம் 250 கிராம் கேரள கஞ்சாவைக் கொண்ட மூன்று மூட்டைகள் அருகிலுள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.