ஒன்றரை கோடி பெறுமதியான தங்கம் சுங்கத்தால் கைப்பற்றப்பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு அழுத்தம் கொடுத்து அபராதம் கூட கொடுக்காமல் விடுவித்ததாக சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு குறிப்பிடுகின்றார்.
இணைய சேனலொன்றில் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனை வஜிர அபேவர்தன மறுத்தாலும் அழுத்தம் காரணமாக எந்தப் பயனும் இல்லை என எழுத்து மூலம் கூறப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கின்றார்.
விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருட்களுக்கான 154 மில்லியன் ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக சுங்கப் பணிப்பாளர் குறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.