web log free
December 15, 2025

நம்பிக்கையில்லா பிரேரணையில் திகதி பிழை

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மற்றுமொரு தடவை கையளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி என, திகதி அச்சிடப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்ட தினமாக கடந்த வருடம் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதால், பிழை திருத்தத்துடனான புதிய பிரேரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Last modified on Sunday, 19 May 2019 05:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd